டின் மீன்களை வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு…!

டின் மீன்களை வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு…!
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற டின் மீன்களை கொள்வனவு செய்யும் போது SLS என்ற இலங்கை தர நிறுவனத்தின்,
தரச்சான்று உள்ளவற்றை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் அதிகார சபை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
தரமற்ற உற்பத்திகள் தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும் எனவும் இலங்கை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் உள்ள தரமற்ற டின்மீன் உற்பத்தி தொடர்பில் எமது செய்தி சேவையில் அண்மையில் வெளிப்படுத்தப்பட்டது.
எமது வெளிப்படுத்தலின் பின்னர் சந்தையில் உள்ள தரமற்ற டின்மீன்கள் தொடர்பில் நுகர்வோருக்கு தெளிவுபடுத்துவதற்காக இலங்கை நுகர்வோர் அதிகார சபை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
எவ்வாறாயினும் இன்றைய தினமும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற டின்மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.