வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…!

வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…!
இலங்கை யில் வாகனங்களின் விற்பனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை தற்போது அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலை ஸ்த்திரநிலையை அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.