நுவரெலியா ஹக்கல பிரதேசத்தில் டீசல் பவுசர் ஒன்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

நுவரெலியா ஹக்கல பிரதேசத்தில் டீசல் பவுசர் ஒன்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பௌசரின் சாரதியும் அவருடன் பயணித்த மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை பனிமூட்டமான காலநிலை மற்றும் வீதியில் தெரிவு இல்லாத காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கொலன்னாவ எண்ணெய் முனையத்திலிருந்து 13600 லீற்றர் டீசலை ஏற்றிச் சென்ற எரிபொருள் பவுசரே விபத்துக்குள்ளானது.
ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு அருகில் உள்ள ஆபத்தான வளைவுக்கு அருகில் உள்ள 60 அடி பள்ளத்தில் விழுந்ததில் தாங்கியிலிருந்த டீசல் ஊற்றப்பட்டுள்ளது. அத்துடன் டீசல் பவுசர் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.