வீதிகளில் நெல் உலரவிட்டிருந்தமையால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
வீதிகளில் நெல் உலரவிட்டிருந்தமையால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
இன்று மாலை பரந்தன்- பூநகரி வீதியில் நெல் உலரவிடப்பட்டிருந்த பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பரந்தன் பூநகரி வீதியில் நெல் உலர்த்தப்படுவதால் வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது . வருடாந்தம் ஏற்படும் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.
விவசாயிகளுக்கும் நெல் உலரவிடுவதற்கான உரிய களம் இன்மையால் இவ்வாறு பிரதான வீதிகளில் நெல் உலரவிட்டும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் போன்ற மாவட்டங்களில் இவ்வாறு வீதிகளில் நெல் உலரவிடும் நிலை காணப்படுகிறது.
அரச அதிகாரிகள் விவசாயிகளுக்கான உலரவிடும் களம் அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.