மல்யுத்த போட்டியில் மு/ வித்தியானந்த கல்லூரி மாணவர்கள் சாதனை

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட மு/ வித்தியானந்த கல்லூரி மாணவர்கள், இருவர் வெண்கலப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மல்யுத்த போட்டி கம்பஹா மாவட்டத்தில் உள்ள வத்துலபிட்டிய உள்ளக விளையாட்டு அரங்கில் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட மு/ வித்தியானந்த கல்லூரி மாணவர்கள், இருவர் வெண்கலப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
A.ரஜிந்தன் வெண்கலப் பதக்கம் 02. S. குயின்சி வெண்கலப் பதக்கம். இவர்களுக்கான பயிற்சிகளை முல்லைத்தீவு மாவட்ட வரலாறு ஆசிரியரும் முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த பயிற்றுனருமான புவனசேகரம் ஜெயதர்சன் வழங்கியிருந்தார்.