பூநகரி பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் குதித்த மக்கள்!

கிளிநொச்சி-பூநகரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று(01.09.2025) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சி-பூநகரி கௌதாரி முனை வெட்டுக்காடு பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே அப்பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.