பொரளை துப்பாகிச்சூட்டில் மற்றுமொருவர் உயிரிழப்பு

பொரளை, பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருவராக உயர்ந்துள்ளது.
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் துப்பாகி சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.