யாழ்ப்பாணத்தில் பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பாண் விலை குறைப்பை யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாண் விலை சம்பந்தமாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் விலை குறைப்பை யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தற்போது யாழ். மாவட்டத்தில் பாண் விலை பத்து ரூபாயால் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைக்கு ஏற்றவாறு குறித்த விலை குறைப்பு செயற்படுத்தப்படுகிறது.