2025 இல் இஸ்ரேலுக்கு பறக்கவுள்ள 2,000 தாதியர்கள்

2025 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து 2,000 தாதியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 148 தாதியர்கள் இஸ்ரேலுக்கு பணிக்காகச் சென்றுள்ளதாகவும், எதிர்வரும் 24 ஆம் திகதி தாதியர் பணிக்காகச் செல்லவுள்ள 17 தாதியர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.