ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

பெபிலியான, திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து நேற்று (18) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீயினால் ஆடை தொழிற்சாலையிலிருந்த பல்வேறு பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் இணைந்து இன்று புதன்கிழமை (19) அதிகாலை 05.00 மணியளவில் தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.