பொய்யான தரவுகளின் அடிப்படையில் மின்கட்டணத்தை உயர்த்த முயற்சி
அரசாங்கம் இந்த மாதம் மின்சார கட்டணத்தை பல மடங்குகளால் உயர்த்துவதற்கான முயற்சியை எடுத்திருந்த போதும், தற்போது அது கிடப்பில் உள்ளது.
எவ்வாறாயினும், இந்த முயற்சியானது பொய்யான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பிழையான தரவுகள் மற்றும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கினாலும், அதனை ஏற்காதிருக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.