கேப்பாபிலவு பூர்வீக நிலம் இராணுவாமே வெளியே! மக்கள் நேற்றுப் போராட்டம்.
முல்லைத்தீவு, கேப்பாபிலவில் இரனயாணுவத்தினர் அமர்ந்துள்ள கண்களை விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி காணிகளுக்குச் சொந்தமான மக்கள் நேற்று செவ்வாய் கிழமைஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
கேப்பாபிலவு இராணுவ முகாமின் பிரதான வாயிலின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .
எமது நிலம் எமக்குவேண்டும் இராணுவமே வெளியேறு எங்கள் சொந்தக் காணிகளுக்குள் இராணுவ முகாம் வேண்டாம் கேப்பாபிலவு எமது பூர்வீக கிராமம் ‘, போர் முடிந்து 14 ஆண்டுகள்: மக்கள் இன்னும் அகதிகளாக வீதியில் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷ மிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் பொதுச்நாடாளுமண்ற உறுப்பினருமான செல்வராச கஜேந்திரன் ,புதுக்குடியிருப்பு பிரதேச்சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.