இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 14 2024 வெள்ளிக்கிழமை !
இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 14 2024 வெள்ளிக்கிழமை !
இன்றைய பஞ்சாங்கம்
14-06-2024 – வெள்ளிக்கிழமை
வைகாசி – 32
குரோதி வருடம் – 2024
பிரம்மா முகூர்த்தம்
04:10 AM – 04:58 AM
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 5:46 AM
சூரியஸ்தமம் – 6:32 PM
சந்திரௌதயம் – Jun 14 12:15 PM
சந்திராஸ்தமனம் – Jun 15 12:38 AM
நல்ல நேரம்:
காலை: 09:30 – 10:30
மாலை : 04:30 – 05:30
கெளரி நல்ல நேரம்:
காலை: 12:30 – 01:30
மாலை: 06:30 – 07:30
இராகு : 10:30 AM – 12.00 PM
குளிகை: 07:30 AM – 09:00 AM
எமகண்டம்: 03:00 PM – 04:30 PM
திதி : முழுவதும் அஷ்டமி.
நட்சத்திரம் : காலை 06.23 வரை பூரம் பின்பு உத்திரம்.
அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.
கரணம்
பத்திரை – Jun 13 09:33 PM – Jun 14 10:48 AM
பவம் – Jun 14 10:48 AM – Jun 15 12:04 AM
பாலவம் – Jun 15 12:04 AM – Jun 15 01:19 PM
யோகம்
ஸித்தி – Jun 13 06:05 PM – Jun 14 07:07 PM
வ்யதீபாதம் – Jun 14 07:07 PM – Jun 15 08:10 PM
நாள் – மேல்நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
காலை 06.23 வரை திருவோணம் பின்பு அவிட்டம்
சுப ஹோரைகள்
காலை:
சுக்கிர ஓரை 06:01 முதல் 07.00 வரை
புதன் ஓரை 07:01 முதல் 08:00 வரை
சந்திர ஓரை 08:01 முதல் 09:00 வரை
குரு ஓரை 10:01 முதல் 11:00 வரை
பகல் :
சுக்கிர ஓரை 01:01 முதல் 02:00 வரை
புதன் ஓரை 02:01 முதல் 03:00 வரை
சந்திர ஓரை 03:01 முதல் 04:00 வரை
குரு ஓரை 05:01 முதல் 06:00 வரை
இரவு :
சுக்கிர ஓரை 08:01 முதல் 09:00 வரை
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 02.11 AM முதல் 03.55 AM வரை
ரிஷப லக்னம் 03.56 AM முதல் 06.02 AM வரை
மிதுன லக்னம் 06.03 AM முதல் 08.13 AM வரை
கடக லக்னம் 08.14 AM முதல் 10.21 AM வரை
சிம்ம லக்னம் 10.22 AM முதல் 12.23 PM வரை
கன்னி லக்னம் 12.24 PM முதல் 02.24 PM வரை
துலாம் லக்னம் 02.25 PM முதல் 04.29 PM வரை
விருச்சிக லக்னம் 04.30 PM முதல் 06.40 PM வரை
தனுசு லக்னம் 06.41 PM முதல் 08.48 PM வரை
மகர லக்னம் 08.49 PM முதல் 10.42 PMவரை
கும்ப லக்னம் 10.43 PM முதல் 12.25 AM வரை
மீன லக்னம் 12.26 AM முதல் 02.06 AM வரை
பண்டிகை
மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் இத்தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை.
சாத்தூர் ஸ்ரீவெங்கடேச பெருமாள் பவனி வரும் காட்சி.
வழிபாடு
பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.
விரதாதி விசேஷங்கள் :
வளர்பிறை அஷ்டமி
எதற்கெல்லாம் சிறப்பு?
விதை விதைப்பதற்கு சிறந்த நாள்.
ஆயுத பயிற்சி மேற்கொள்ள ஏற்ற நாள்.
ஆடை அணிகலன்களை வாங்க உகந்த நாள்.
குளம், கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.
மேஷம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனதை உறுத்திய சில கவலைகள் மறையும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கால்நடை வளர்ப்பு தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். புதிய இடங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலை உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : கவலைகள் மறையும்.
கிருத்திகை : லாபங்கள் மேம்படும்.
ரிஷபம்
ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : மனப்பக்குவம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
மிதுனம்
பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவினர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் விலகும்.
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
கடகம்
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். முயற்சிக்கு ஏற்ப சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
பூசம் : தடைகள் குறையும்.
ஆயில்யம் : நெருக்கம் அதிகரிக்கும்.
சிம்மம்
சூழ்நிலை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். அரசு காரியங்களில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உண்டாக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உணவு சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய இலக்குகள் பிறக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
பூரம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.
உத்திரம் : இலக்குகள் பிறக்கும்.
கன்னி
தனவரவுகளில் இழுபறியான சூழ்நிலை அமையும். பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கல்விப் பணிகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : இழுபறியான நாள்.
அஸ்தம் : புரிதல் அதிகரிக்கும்.
சித்திரை : பிரச்சனைகள் நீங்கும்.
துலாம்
உடன்பிறந்தவர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
விருச்சிகம்
கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : ஈடுபாடு ஏற்படும்.
அனுஷம் : அனுபவம் வெளிப்படும்.
கேட்டை : பயணங்கள் சாதகமாகும்.
தனுசு
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாக அமையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சில அனுபவங்களின் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சகோதரர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : உற்சாகமான நாள்.
பூராடம் : பயணங்கள் சாதகமாகும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
மகரம்
இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகள் சாதகமாக முடியும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்
உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : மதிப்புகள் கிடைக்கும்.
கும்பம்
மனதளவில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் தோன்றும். பணிகளில் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். வியாபார பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்
அவிட்டம் : சோர்வான நாள்.
சதயம் : அனுகூலமற்ற நாள்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
மீனம்
இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலை ஏற்படும். புதிய நபர்களின் மூலம் வருமானம் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : வருமானம் மேம்படும்.
ரேவதி : தெளிவுகள் உண்டாகும்.