*அளவெட்டி சதானந்த வித்தியாலயம் மூடப்படும் அபாயம்!
*அளவெட்டி சதானந்த வித்தியாலயம் மூடப்படும் அபாயம்!
கிட்டத்தட்ட 100 வருட வரலாற்றைக்கொண்ட அளவெட்டி சதானந்த வித்தியாலத்தில் ஆண்டு 5 இல் இறுதியாக பயின்ற மாணவர்களும் இடைநிலைக் கல்விக்காக வேறு பாடசாலைக்கு சென்றுவிட்டதால் மாணவர்கள் யாருமற்ற நிலையில் அதிபருடனும் ஒரு ஆசிரியருடனும் மாணவர்கள் யாராவது புதிதாக வருவார்களா? என காத்திருக்கின்றது.*
*இன்னும் ஓரிரு மாதங்களில் யாரும் கிடைக்காதவிடத்து பாடசாலை முற்றாக மூடப்படும்!*
*மிகப்பழமைவாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான வறுத்தலைவிளான் அமெரிக்க மிசன் பாடசாலை சில வருடங்களின் அவ்வாறான ஒரு நிலையை நோக்கி பயணித்த போது ஊரவர்களின் ஊக்கத்தால் அந்த பாடசாலை மீள் எழிர்ச்சி பெற்றது.*
*எத்தனை கனவுகளோடு முன்னோர்கள் பெருமுயற்சி எடுத்து இவ்வாறான கல்விக்கூடங்களை உருவாக்கி இருப்பர். புகழ்பூத்த பல கல்விமான்களை பிரபல பாடசாலைகளும் ஆலயங்களையும் கொண்ட செழிப்புற மிளிரும் ஊரான அளவையூர் மக்கள் இந்த பாடசாலையை காப்பாற்ற முன்வரவேண்டும்!*