இலங்கை துறைமுக அதிகாரசபையின் அறிக்கை!
இலங்கை துறைமுக அதிகாரசபையின் அறிக்கை!
இலங்கை துறைமுக அதிகாரசபையானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு சாதனை கொள்கலன் இயக்கத் திறனைப் பெற்றுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2023 இன் முதல் காலாண்டில், கொள்கலன் செயல்பாடுகளின் அளவு 441,032 ஆக இருந்தது. இந்த ஆண்டு தொகை 652766. இதன் வளர்ச்சி 48% என்று துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், 582,403 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 49.81% ஆகும் என அதிகாரசபையின் தொடர்பாடல் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் பிரதான முகாமையாளர் திரு.சித்ரல் ஜெயவர்ண தெரிவித்தார்.