வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான பாலம் பொறுப்பான அதிகாரிகள் சற்று கண்களைத் திறவுங்கள்!
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான பாலம் பொறுப்பான அதிகாரிகள் சற்று கண்களைத் திறவுங்கள்!
கேகாலை மாவட்டத்தின் பாலம்பிட்டிய தொடக்கம் மேல் பாலம்பிட்டிய வரையான வா ஓயாவிற்கு குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள தனகஹ ஒலுவா பாலம் பாழடைந்தமையினால் கிராம மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த பாலத்தை 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மரம் விழுந்து பாலம் சேதமடைந்தது. மழை நாட்களில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.