பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை: அறிவித்தல் வெளியானது!
பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை: அறிவித்தல் வெளியானது!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சு வெளிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (16) நிறைவடையவுள்ளது.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது