யாழில். தாய்ப்பால் புரைக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு !
யாழில். தாய்ப்பால் புரைக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு !
யாழ்ப்பாணம் – மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த குழந்தையொன்று பால் புரையேறியதில் உயிரிழந்துள்ளது.
பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
பால் சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்றைய தினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.