இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம் !
இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம் !
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் வட மாகாணத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் வட திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கியும் காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்று தெரிவித்தார்.