சிங்களப் புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும்!
சிங்களப் புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும்!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நீதி கோருகின்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய நாங்கள் எமது உறுப்பினரும் ஆதரவாளர்கள், தொண்டர்கள் திரண்டு இருக்கின்றோம்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நீதி பாதிக்கப்பட்டிருக்கின்றார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடியாட்களால் அச்சுறுத்தப்பட்டு இருக்கின்றது. அவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது.
அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் அவரின் உரிமைகள் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
இந்த இடத்திலேயே சிங்கள சகோதரர்களே, புத்திஜீவிகளே,சிவில் அமைப்புகளும் தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்காக அல்லது இன்று மரியாதைக்குரிய மூல்லைதீவு மாவட்ட நீதிபதிக்கு ஏற்பட்ட நிலைமை நாளை உங்களுடைய சிங்கள நீதிபதிக்கு ஏற்படலாம்.அந்த நேரத்தில் நீங்கள் போராடியும் பிரயோசனம் கிடையாது ஏனென்றால் சில நேரத்தில் அந்த நேரத்தில் உங்களுடைய நாடு சீனாவினதோ அல்லது வேறு நாடுகளிலோ காலனியில் அல்லது காலனித்துவமான நாடக மாறி இருக்கும் அன்புக்குரிய சிங்கள மக்களே சிங்கள சகோதரிகளே சிவில் அமைப்புகளை தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கையை அபிலாசைகளுக்காக மூல்லைதீவு மாவட்ட நீதிபதிக்கி நீதி கிடைக்குமாறு நீங்களும் எங்களுடன் சேர்ந்து போராடி குரல் கொடுக்க முன் வரவேண்டும் என்று அது மாத்திரமன்றி அல்ல ஐ.நா சபை போன்ற பன்னாட்டு மன்றங்கள் கால தாமதம் இல்லாமல் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் இனிய ஆதாரங்கள் இல்லை சாட்சி இல்லை என்பவர்கள் யாராவது சொல்வார்களாக இருந்தால் மக்கள் அவர்களுக்கு நல்ல பதில் சொல்வார்கள்.
ஏனென்றால் இங்கு ஒரு நீதிபதிக்கே இந்த நாட்டில் வாழ முடியாத நிலைமையை ஏற்பட்டிருக்கின்றது என்றால் இங்கு சாதாரண மக்கள் நிலைமை என்ன அனைவரும் சிந்தித்துப் பாருங்கள்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் வலியுறுத்தியுள்ளார்.