வடக்கு கிழக்கு தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!! வடக்கு கிழக்கு தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!!
வடக்கு கிழக்கு தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!!
வடக்கு கிழக்கு தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!!
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மேம்பட்டு வருகின்ற போதிலும் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சனத்தொகையில் 17 வீதமானோர் உணவுப் பாதுகாப்பின்மையை தொடர்ந்து அனுபவித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்தவர்களில் 55 ஆயிரம் பேர் மீண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு திட்டம் இணைந்து 2023 பெப்ரவரி, மார்ச் மாதங்களில் மேற்கொண்ட பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பாய்வுப் பணி அறிக்கையின்படி, இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் உணவு பாதுகாப்பின்மை நீடிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி 39 இலட்சம் மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் மிதமான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக இந்த அறிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான இரண்டாவது, பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு பணி அறிக்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக விவசாயத் திட்ட பிரதிநிதி விம்லேந்திர ஷரன் மற்றும் உலக உணவுத் திட்ட இலங்கைப் பிரதிநிதியும் வதிவிடப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்தீகி ஆகியோரினால் கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் படி கடந்த ஆண்டு தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்தவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரம் பேரிலிருந்து ஏறக்குறைய 10 ஆயிரம் பேராக குறைவடைந்துள்ளது.உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றம், சிறந்த உணவு நுகர்வில் இருந்து உருவாகிறது.
இதற்கு இப் பணி முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட, உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவையே காரணமாக இருக்கலாம் எனவும் குறித்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.இந்த நிலையில் விவசாயிகளுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு உலக உணவுத் திட்டம் மற்றும் விவசாய அமைப்பின் பணிக் குழு பரிந்துரைத்துள்ளது.குறிப்பாக விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு குறித்த பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.