முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் உயிருக்கு போராடும் யானை.!
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் உயிருக்கு போராடும் யானை.!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு கோணக்குளம் பகுதியில் யானை ஒன்று உயிருக்கு போராடும் நிலையில் காணப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக குறித்த யானை அப்பகுதிகளில் நடமாடி வருவதாகவும், யானையின் கால் பகுதியில் காயங்கள் இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும், அந்த பகுதியின் குளக்கரை நீர் பகுதியில் குறித்த யானை படுத்திருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பல தடவைகள் அறிவித்தல் கொடுத்தும் அவர்கள் வரவில்லை என்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை பாதுகாக்க தவறி நிற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.