பிரான்ஸ் – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பு

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், உக்ரைன் போரில் அமைதி ஒப்பந்தம் சரணடைவதாக இருக்கக்கூடாது என்றும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் போர்நிறுத்தத்தை அர்த்தப்படுத்தக்கூடாது என்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி விரைவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.