காட்டுப் பகுதிகளில் தொடருந்து சேவை! நடைமுறைக்கு வரவுள்ள சிறப்பு திட்டம்

காட்டுப் பகுதிகளில் காட்டு யானைகள் தொடருந்துகளில் மோதுவதைத் தடுக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு திட்டம், மட்டக்களப்பு – கொழும்பு தொடருந்து பாதையில் யானைகள் தொடருந்துகளில் மோதுவதைத் தடுக்க முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்புத் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காட்டு யானைகள் தொடருந்துகளில் மோதுவதைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வனப்பகுதிகளில் தொடருந்துகளை ஓட்டும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த தொடருந்தில் மோதுண்டு ஆறு யானைகள் பலியாகியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.