அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் ரூ.5,975 உயர்த்தப்படுவதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அரசாங்க சேவையில் தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளில், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு ரூ.17,800 மற்றும் இதற்கு முன்னர் அதிகரிக்கப்பட்ட ரூ.7,500 காணப்படுகிறது.
இந்த ரூ.7,500 தொகை அடிப்படைச் சம்பள உயர்வாக ரூ.15,750 ஆக மாற்றப்படும். இதனால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.5,975 உயர்வடையும்.
அதேபோல், அரச சேவையில் உள்ள அனைவருக்கும் வருடாந்த சம்பள அதிகரிப்பு 80% வரை உயர்த்தப்பட உள்ளது. குறைந்தபட்சமாக ரூ.250 சம்பள உயர்வு, அதிகபட்சமாக ரூ.450 ஆக மாற்றப்படும்.
கிராம உத்தியோகத்தர் (GN-1) சேவையின் தற்போதைய சம்பளம் ரூ.28,940 ஆக இருக்கும். இது மூன்று ஆண்டுகளுக்குள் ரூ.56,630 ஆக உயர்த்தப்படும்.
மேலும், வைத்தியர்களின் (MO) தற்போதைய சம்பளம் ரூ.54,250 ஆக உள்ளது. இது அடிப்படைச் சம்பள உயர்வினால் ரூ.91,750 ஆக உயர்த்தப்படும்.
வைத்தியர்களுக்கு கிடைக்கக் கூடிய மொத்த சம்பள உயர்வு ரூ.37,450 ஆகும். அதிலிருந்து ரூ.7,500 கழிக்கப்பட்ட பிறகு, ரூ.29,960 இல் 30% வீதமான தொகை வழங்கப்படும்.
மேலதிக நேர பணிக்கான கொடுப்பனவு தற்போதைய ரூ.687 இலிருந்து ரூ.764 ஆக உயர்த்தப்படும். இந்த சம்பள உயர்வு ஏப்ரல் 1ம் திகதி முதல் நடைமுறையில் வரும் என அமைச்சர் தெரிவித்தார்.