மண்மேடு இடிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி

பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அணை கட்டுவதற்காக பலருடன் சேர்ந்து அடித்தள குழி வெட்டிக் கொண்டிருந்தபோது, அதற்கு மேலே இருந்த மண் குவியல் குறித்த இளைஞனின் உடலில் சரிந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (23) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண் அகற்றப்பட்டு, குறித்த இளைஞனை மீட்டு பண்டாரவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பண்டாரவளை, துல்கொல்ல பகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.