பல மில்லியன் பெறுமதியான களவாடப்பட்ட சவர்க்காரங்களுடன் சிக்கிய சந்தேக நபர்

குருணாகல் பகுதியில்,பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை பாரவூருதி ஒன்றில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதுடைய குறித்த சந்தேக நபர், நிறுவனங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சவர்க்காரங்களை பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.