பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி ; 3 காவல்துறையினர் காயம்

பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் இருவர் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு கழுத்திலும் மற்றவருக்கு மார்பிலும் கத்திக்குத்து நடத்தப்பட்டபோது 69 வயது போர்த்துக்கீசியர் இந்த சம்பவத்தில் தலையிட முற்பட்ட போது அவரும் கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளார்.
சந்தேக நபரான 37 வயது அல்ஜீரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டார். காங்கோ ஜனநாயகக் குடியரசை ஆதரித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது, அங்கு காவல்துறை அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர் கத்திக்குத்தில் ஈடுபட்டபோது “அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டார். இதனால் வழக்குரைஞர்கள் பயங்கரவாத விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தை இஸ்லாமிய பயங்கரவாதச் செயல் என்று பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது இரங்கலை அவர் தெரிவித்தார்.
நமது மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பணியைத் தொடர அரசாங்கத்தின் மற்றும் என்னுடைய உறுதியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறினார்.
சந்தேக நபரின் முதல் இலக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் என்று பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்பு வழக்குரைஞர்கள் பிரிவு (PNAT) தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பயங்கரவாத தடுப்பு கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.