தமிழர் பகுதியில் பெருந்தொகை கேரள கஞ்சா பறிமுதல்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தன் பகுதியில் லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது