சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள இளநீர் விலை!

செவ்விளநீர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அதிக வெப்பத்தால் செவ்விளநீர் தேவை அதிகரித்துள்ளதால், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய தற்போதைய சந்தை நிலவரங்கள்படி,கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இந்த நாட்களில் ஒரு செவ்விளநீர் 300 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறிய செவ்விளநீர் 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, சந்தையில் ஒரு தேங்காய் விலை 200 ரூபாயைத் தாண்டியுள்ளது.