சஞ்சீவ கொலை சம்பவம்; சட்டத்தரணி வேடமணிந்த பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகின

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருக்கு உதவியாக சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த பெண்ணின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதன்படி, குறித்த பெண் தேவகே இஷாரா செவ்வந்தி என்பவர் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து குறித்த பெண்ணின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.