கனடாவில் மீன்பிடித்த இருவர் பரிதாபமாக மரணம்

கனடாவின் அல்பர்ட்டா குரோ லேக் ப்ரொவின்ஷியல் பூங்காவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அவசர சேவை படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
பனியில் மீன்பிடிக்கும் கூடத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கூடத்தில் கார்பன் மோனாக்ஸைடு விஷவாயு தாக்த்தனால் இந்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஆனால், ஒருவர் 45 வயதான ஃபோர்ட் மெக்மரே நகரைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் 37 வயதான லாப்ரடார் சிட்டி, நியூஃபவுண்ட்லாந்து பகுதியைச் சேர்ந்தவராகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.