பாண் குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலை மாறாது

இலங்கையில் பாண் விலை குறைந்தாலும், ஏனைய பேக்கரி பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நேற்று(17) தீர்மானித்திருந்தன.
இதன்படி, ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.