அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!
அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!
திருகோணமலையிலிருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று:
காற்று வடகிழக்கு திசையில் வீசும் மற்றும் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கடல் நிலை:
கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.