21 நவம்பர் 2024க்கான வானிலை முன்னறிவிப்பு!
21 நவம்பர் 2024க்கான வானிலை முன்னறிவிப்பு!
இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரலாம். இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
21 நவம்பர் 2024 அன்று காலை 05.30 மணிக்கு வழங்கப்பட்டது
மழையின் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று கிழக்கிலிருந்து வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (20-30) கிலோமீற்றர் வரை காணப்படும். முல்லைத்தீவில் இருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கடல் நிலை:
முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவுக்கு மிதமானதாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.