இன்று 09.11.2024 வளர்பிறை அஷ்டமி..!
இன்று 09.11.2024
வளர்பிறை அஷ்டமி..!
சிவனின் அம்சமான ஸ்ரீ பைரவரை வழிபடுவ தற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள்.
வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் நம் கஷ்டங்க ள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் என பெரியோர்க ளால் கூறப்பட்டுள்ளது.
பைரவருக்கு பெரும்பாலும் ராகுகால நேரத்தி ல் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம்.
அஷ்டமி தினம் இன்று பைரவரை விரதம் இருந்து வழிபாடு செய்ய சிறந்த தினமாகும். அன்று பைரவரை வழிபடுவதால் சிவபெரு மானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.
வளர்பிறை அஷ்டமி தினம் பைரவருக்கு விரதம் இருந்து, பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தி யம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபி த்து பைரவரை தியானிப்ப தும், வணங்குவது சிறப்பாகும்.
வளர்பிறை அஷ்டமியில் பைரவப்பெருமா னை வணங்குபவர்களுக்கு எதிரிகளால் ஏற்ப டும் தொல்லைகள் நீங்கும். கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புகள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பண வரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும்.
உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
ஓம் நமசிவாய…
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ…
ஸ்ரீ கபால பைரவர் திருவடிகளே போற்றி…
09.11.2024.. நேசமுடன் விஜயராகவன்….