புசுபுசுன்னு ஆப்பமும் டக்குனு ஒரு குருமாவும் செய்வோமா வாங்க பார்க்கலாம்?
புசுபுசுன்னு ஆப்பமும் டக்குனு ஒரு குருமாவும் செய்வோமா வாங்க பார்க்கலாம்?
ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள் 👇
🌼 பச்சரிசி இரண்டு கப்
🌼 புழுங்கல் அரிசி ஒரு கப்
🌼 உளுந்து 1/4 கப்
🌼 வெந்தயம் ஒரு தேக்கரண்டி
📌மேலே உள்ள பொருட்களை நன்கு கழுவி ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்
📌 ஊறிய அரிசியுடன் ஒரு கப் சாதம் அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்
📌 ஆறு மணி நேரம் புளிக்கச் செய்து ஆப்பம் சுட்டால் பஞ்சு போல வரும்
குருமா செய்ய தேவையான பொருட்கள் 👇
📌 அரைப்பதற்கு 👇
🌼 தேங்காய் துருவல் அரை கப்
🌼 பொட்டுக்கடலை 1/4 கப்
🌼 சோம்பு ஒரு தேக்கரண்டி
🌼 காய்ந்த மிளகாய் இரண்டு
📌மேலே உள்ள பொருட்களை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதுகளாக அரைத்துக் கொள்ளவும்
📌 தாளிப்பு 👇
🌼 ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நீள்வாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து நன்கு வதக்கவும்
🌼 கருவேப்பிலை ஒரு பச்சை மிளகாய், ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
🌼 தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் பொடியும் சேர்த்து அரைத்து விழுதுகளும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
🌼 தேவைப்படும் ஆனால் தண்ணீர் சேர்க்கலாம்
🌼 நன்கு கொதித்து பச்சை வாசம் நீங்கியதும் மல்லி இலைகள் தூவி இறக்கவும் ❤️