நாம் மறந்துவிட்ட நமது மூதாதையர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள்…!
நாம் மறந்துவிட்ட நமது மூதாதையர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள்…!
இஞ்சியை கறிக்கும், தேனீருகும் மட்டுமே பயன்படுத்துகின்றோம்.
ஆனால் இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் என்று! சிந்தியுங்கள்.
நோய்களை நீக்குவதில்
இஞ்சி ஒரு சமையலறை மருத்துவர்!,, அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் எல்லோரும் பயனடையட்டும்
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்…
இத்தகைய அருமை வாய்ந்த இஞ்சி காய்ந்த பின் சுக்கு என்று அழைக்கப்படுகின்றது.
ஆற்றல் மிகுந்த இந்த சுக்குடன், மிளகு, திப்பிலி, அக்கரா, சித்திரத்தை, அதிமதுரம், வால்மிளகு, முள்முருங்கை, வேலிப்பருத்தி, மற்றும் மூலிகைகளுடன் கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்பட்ட இஞ்சி ரசாயனம் சுக்கு சூரணம் போல் போல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது தினம் ஒரு ஸ்பூன் 100ml வெண்ணீருடன் உணவு அருந்திய பின் சாப்பிட்டு வாழ்க வளமுடன்! நலமுடன்!!