நிமோனியாக் காய்ச்சல் கோப்பாயில் பெண் மரணம்!
நிமோனியாக் காய்ச்சல் கோப்பாயில் பெண் மரணம்!
நிமோனியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் நேற்று (17) கோப்பாயில் உயிரிழந்துள்ளார்.
இதில் கோப்பாய் தெற்கு வீரபத்திர கோவிலடியைச் சேர்ந்த காந்தீபன் சுதர்சினி வயது(44) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர் யாழ்ப்பாணம் தேசிய கல்லூரி விடுதி கல்வி சாரா ஊழியரான அவர் காய்ச்சல் காரணமாக கடந்த 13 ஆம் திகதி வீட்டுக்குச் சென்றுள்ளார். தாயார் நேற்று வீட்டுக்குத் திரும்பிய போது அந்தப் பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பின்பு உடற் கூற்றுப் பரிசோதனையில் நிமோனியா காய்ச்சலால் இறப்பு சம்பவித்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.