Ada Derana YouTube செனலுக்கு 03 மில்லியன் subscribers!
Ada Derana YouTube செனலுக்கு 03 மில்லியன் subscribers!
இலங்கை மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி ‘அத தெரண’ மற்றுமொரு மைல்கல்லை கடந்துள்ளது.
இலங்கையில் செய்தி வழங்கும் யூடியூப் செனல்களில் 3 மில்லியன் subscribers களை கடந்த ஒரே மற்றும் முதல் யூடியூப் செனல் என்ற பெருமையை ‘அத தெரண’ பெறுகிறது.
இலங்கையில் தொலைக்காட்சி மூலம் மட்டும் செய்திகளைப் பார்க்கும் ரசிகர்களுக்கு, யூடியூபில் செய்திகளை உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இணையத்தில் Ada Derana YouTube செனல் 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Ada Derana YouTube செனலுக்கு சொந்தமான 131,000 வீடியோக்கள் தற்போது 1.7 பில்லியன் views ஐ தாண்டியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
மேலும் Ada Derana YouTube செனலில் மாதாந்தம் இணையும் புதிய subscribers களின் எண்ணிக்கை 100,000 ஐத் தாண்டியுள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி YouTube பார்வையாளர்களுக்கு உண்மையைச் சொல்லும் முதல் நபராக இருப்போம் என்பது எங்கள் நம்பிக்கை.
மேலும் நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்த, Ada Derana YouTube எங்களுடன் தொடர்ந்தும் பயணிக்குமாறு அன்புடனும் மரியாதையுடனும் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.