* இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம்.*!
* இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம்.*!
கடந்த காலத்தை எண்ணிப் பார்க்கின்றேன்.
நவராத்திரி என்றாலே மாணவர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஊட்டிய நாட்கள் !
ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் தங்களது பூஜைகளை பாடசாலைகளில் நடத்துவதனை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்துக்கள் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்தியாவின் பல்வேறு பாகங்களில், பல்வேறுபட்ட பெயர்களுடன் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
ஒரிசாவில் ஹோடல் பூசை, குஜராத்தில் அம்பாஜீ, மகாராஷ்டிரத்தில் காகர் புங்ளே, கர்நாடகத்தில் தசரா, வங்கதேசத்தில் துர்கா நாம் என பெயரிடப்பட்டுக் கொண்டாடப்படுகின்றது.
மேலும் மலேசியா, சிங்கப்பூர் , மொரிசியஸ், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் இந்துக்கள் வாழ்கின்ற பல நாடுகளிலும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
இவ்விழா சம்பந்தமாக பல்வேறு ஐதீகங்கள் காணப்படுகின்றன.
*தீமையின் சிருஷ்டியான ராவணனை எதிர்த்து, வெற்றியீட்டிய* *இராமரின் வெற்றியின் அடையாளமாக வட இந்தியாவில் நவராத்திரி* *கொண்டாடப்படுகிறது .*
*மக்களைத் துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனுடன்* *ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாளில் அவனை வதம் செய்து* *வெற்றி அடைந்ததாக இன்னுமொரு ஐதீகம் கூறுகின்றது* .
தீமைகளை அழித்து, தர்மத்தை நிலைநாட்டும் சக்தி வழிபாட்டின் தினங்களாக இது கருதப்படுகின்றது.
அறியாமை, அகங்காரம், துன்பங்கள் நீங்கி, வாழ்வில் ஒரு பிரகாசமான ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
” நவராத்திரி” என்ற சொற்பதம் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியது .
” நவ” என்பது ஒன்பதையும், “ராத்திரி” என்பது இரவையும் குறிக்கும்.
எனவே, நவராத்திரி என்பது ஒன்பது இரவுகள் எனப் பொருள்படும்.
சக்தியை நோக்கி அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி.
அம்மனை இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றனர்.
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கல்வி, செல்வம் , வீரம் என்பன முக்கியமானவை ஆகும்.