வெடித்துச் சிதறிய சீனா தயாரிப்பு; தவறிழைத்த சீனா!
வெடித்துச் சிதறிய சீனா தயாரிப்பு;
தவறிழைத்த சீனா!
சீனாவில் தவறுதலாக விண்ணிற்கு ஏவப்பட்ட ரொக்கட் ஒன்று இடைநடுவில் உடைந்து நிலத்தில் வீழ்ந்து வெடித்துள்ளது. விண்ணிற்கு ஏவி சில நிமிடங்களில் ரொக்கட்டின் பாகங்கள் அதிலிருந்து பிரிந்துள்ளதுடன் , விண்ணிற்கு செல்ல வேண்டிய பாகமும் மீண்டும் தரையில் வந்து விழுந்துள்ளது.
ரொக்கட் கீழே விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. Tianlong– 3 என்ற குறித்த ரொக்கட் சீனாவின் ஹெனான் மாநிலத்தில் மத்திய பகுதியிலுள்ள மலைப்பாங்கான பிரதேசத்தில் வீழ்ந்து வெடித்துச் சிதறியுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு ரொக்கட்டை தயாரித்த நிறுவனம் பொறுப்புக்கூற வேண்டுமென சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரொக்கட்டின் வடிவமைப்பு கட்டமைப்பில் ஏற்ப்ட்ட கோளாறு இதற்கு காரணமென தெரியவந்துள்ளது. இந்நிலையில் ரொக்கட் வெடித்துச் சிதறியதில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.