இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 21 2024 வெள்ளிக்கிழமை!
இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 21 2024 வெள்ளிக்கிழமை!
இன்றைய பஞ்சாங்கம்
21-06-2024 – வெள்ளிக்கிழமை
ஆனி – 07
குரோதி வருடம் – 2024
பிரம்மா முகூர்த்தம்
04:11 AM – 04:59 AM
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 5:47 AM
சூரியஸ்தமம் – 6:33 PM
சந்திரௌதயம் – Jun 21 6:10 PM
சந்திராஸ்தமனம் – Jun 22 5:39 AM
நல்ல நேரம்:
காலை: 09:30 – 10:30
மாலை : 04:30 – 05:30
கெளரி நல்ல நேரம்:
காலை: 12:30 – 01:30
மாலை: 06:30 – 07:30
இராகு : 10:30 AM – 12.00 PM
குளிகை: 07:30 AM – 09:00 AM
எமகண்டம்: 03:00 PM – 04:30 PM
திதி : காலை 07.44 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி.
நட்சத்திரம் : மாலை 06.58 வரை கேட்டை பின்பு மூலம்.
அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.53 வரை சித்தயோகம் பின்பு மாலை 06.58 வரை மரணயோகம் பின்பு அமிர்தயோகம்.
கரணம்
வனசை – Jun 20 07:46 PM – Jun 21 07:32 AM
பத்திரை – Jun 21 07:32 AM – Jun 21 07:09 PM
பவம் – Jun 21 07:09 PM – Jun 22 06:37 AM
யோகம்
சுபம் – Jun 20 08:12 PM – Jun 21 06:42 PM
சுப்ரம் – Jun 21 06:42 PM – Jun 22 04:45 PM
நாள் – சமநோக்கு நாள்
பிறை – பெளர்ணமி
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
மாலை 06.58 வரை பரணி பின்பு கிருத்திகை
சுப ஹோரைகள்
காலை:
சுக்கிர ஓரை 06:01 முதல் 07.00 வரை
புதன் ஓரை 07:01 முதல் 08:00 வரை
சந்திர ஓரை 08:01 முதல் 09:00 வரை
குரு ஓரை 10:01 முதல் 11:00 வரை
பகல் :
சுக்கிர ஓரை 01:01 முதல் 02:00 வரை
புதன் ஓரை 02:01 முதல் 03:00 வரை
சந்திர ஓரை 03:01 முதல் 04:00 வரை
குரு ஓரை 05:01 முதல் 06:00 வரை
இரவு :
சுக்கிர ஓரை 08:01 முதல் 09:00 வரை
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 01.44 AM முதல் 03.27 AM வரை
ரிஷப லக்னம் 03.28 AM முதல் 05.30 AM வரை
மிதுன லக்னம் 05.31 AM முதல் 07.45 AM வரை
கடக லக்னம் 07.46 AM முதல் 09.54 AM வரை
சிம்ம லக்னம் 09.55 AM முதல் 11.56 AM வரை
கன்னி லக்னம் 11.57 AM முதல் 01.56 PM வரை
துலாம் லக்னம் 01.57 PM முதல் 04.02 PM வரை
விருச்சிக லக்னம் 04.03 PM முதல் 06.13 PM வரை .
தனுசு லக்னம் 06.14 PM முதல் 08.20 PM வரை
மகர லக்னம் 08.21 PM முதல் 10.15 PM வரை
கும்ப லக்னம் 10.16 PM முதல் 11.58 PM வரை
மீன லக்னம் 11.59 AM முதல் 01.39 AM வரை
பண்டிகை
திருநெல்வேலி ஸ்ரீநெல்லைப்பர் ரத உற்சவம்.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் முப்பழ உற்சவம்.
சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
விரதாதி விசேஷங்கள் :
பௌர்ணமி
எதற்கெல்லாம் சிறப்பு?
பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு சிறந்த நாள்.
வழக்குகளை பேசி தீர்க்க நல்ல நாள்.
குளம், கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.
இயந்திர பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
*(21-06-2024) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்*
மேஷம்
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : விவாதங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் தெளிவு உண்டாகும். கலைத்துறையில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : தெளிவுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆசைகள் பிறக்கும்.
மிதுனம்
சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த ஏற்ற இறக்கங்கள் மறையும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : குழப்பம் உண்டாகும்.
திருவாதிரை : அனுபவம் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.
கடகம்
எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : ஆர்வமின்மையான நாள்.
ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.
சிம்மம்
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். உணவு சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : சேமிப்புகள் குறையும்.
பூரம் : ஆலோசனை கிடைக்கும்.
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
கன்னி
அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : புதுமையான நாள்.
துலாம்
தந்தையிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் மாற்றம் பிறக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : துரிதம் ஏற்படும்.
விருச்சிகம்
எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் பிறக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். முதலீடு குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : தடுமாற்றம் ஏற்படும்.
அனுஷம் : ஆர்வம் உண்டாகும்.
கேட்டை : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சுப காரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். நண்பர்களிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். கொள்கை பிடிப்பு குணத்தில் மாற்றம் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூராடம் : அபிவிருத்தியான நாள்.
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
மகரம்
தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட கவனம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். புதிய கல்வி குறித்த தேடல் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : ஆரோக்கியம் மேம்படும்.
அவிட்டம் : தேடல்கள் அதிகரிக்கும்.
கும்பம்
குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு குறித்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : லாபகரமான நாள்.
பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
மீனம்
உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். மனை சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.