உலகத்தை ஆளும் தமிழன்! வச்சக்குறி தப்பாது என பார்வையிலே சொல்கிறாரோ பிரக்ஞானந்தா
![உலகத்தை ஆளும் தமிழன்! வச்சக்குறி தப்பாது என பார்வையிலே சொல்கிறாரோ பிரக்ஞானந்தா](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/FB_IMG_1717578293877-673x560.jpg)
உலகத்தை ஆளும் தமிழன்! வச்சக்குறி தப்பாது என பார்வையிலே சொல்கிறாரோ பிரக்ஞானந்தா!
உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, உலகின் இரண்டாம் நிலை வீரர் ஃபேபியானோ கருவானாவையும் வீழ்த்தி செஸ் உலகையே திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார்!
முதல் முறையாக முதல் இரண்டு வீரர்களை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா! 5 சுற்றுகள் முடிந்த நிலையில் தொடரில் 8.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.
பிரக்ஞானந்தாவால் உலகில் உள்ள செஸ் வீரர்களின் பெயர்களை எல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இந்திய மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பயணம் தொடரட்டும். பெண்கள் பிரிவில் அவரது சகோதரி வைஷாலி 10 புள்ளிகளுடன் தொடரில் முதல் இடத்தை வகிக்கிறார்.
வாழ்த்துகள் யங் மாஸ்டர் பிரக்ஞானந்தா!