இன்றைய ராசி பலன்கள் 31 மே 2024 வெள்ளிக்கிழமை!
இன்றைய ராசி பலன்கள் 31 மே 2024 வெள்ளிக்கிழமை!
இன்றைய பஞ்சாங்கம்.
31-05-2024 – வெள்ளிக்கிழமை
வைகாசி – 18
குரோதி வருடம் – 2024
பிரம்மா முகூர்த்தம்
04:09 AM – 04:57 AM
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 5:45 AM
சூரியஸ்தமம் – 6:27 PM
சந்திரௌதயம் – May 31 12:37 AM
சந்திராஸ்தமனம் – May 31 12:44 PM
நல்ல நேரம் :
காலை : 09:00 -10:00
மாலை : 04:30 – 05:30
கௌரி நல்ல நேரம் :
காலை : 12:30 – 01:30
மாலை : 06:30- 07:30
ராகுகாலம்:- 10.30AM-12.00PM
குளிகை:- 7.30AM-9.00AM
எமகண்டம்:- 3.00PM-4.30PM
திதி : காலை 08.52 வரை அஷ்டமி பின்பு நவமி.
நட்சத்திரம் : அதிகாலை 04.22 வரை சதயம் பின்பு பூரட்டாதி.
அமிர்தாதி யோகம் : அதிகாலை 04.22 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்
கரணம்
கௌலவம் – May 30 10:42 PM – May 31 09:38 AM
சைதுளை – May 31 09:38 AM – May 31 08:32 PM
கரசை – May 31 08:32 PM – Jun 01 07:24 AM
யோகம்
விஷ்கம்பம் – May 30 08:53 PM – May 31 06:04 PM
ப்ரீதி – May 31 06:04 PM – Jun 01 03:10 PM
நாள் – கீழ்நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
சூலம்:மேற்கு
பரிகாரம்: வெல்லம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
புனர்பூசம்
சுப ஹோரைகள்
காலை :
சுக்கிர ஓரை 06.01 முதல் 07.00 வரை
புதன் ஓரை 07.01 முதல் 08.00 வரை
சந்திர ஓரை 08.01 முதல் 09.00 வரை
குரு ஓரை 10.01 முதல் 11.00 வரை
பகல் :
சுக்கிர ஓரை 01.01 முதல் 02.00 வரை
புதன் ஓரை 02.01 முதல் 03.00 வரை
சந்திர ஓரை 03.01 முதல் 04.00 வரை
குரு ஓரை 05.01 முதல் 06.00 வரை
இரவு :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 03.06 AM முதல் 04.50 AM வரை
ரிஷப லக்னம் 04.51 AM முதல் 06.57 AM வரை
மிதுன லக்னம் 06.58 AM முதல் 09.08 AM வரை
கடக லக்னம் 09.09 AM முதல் 11.17 AM வரை
சிம்ம லக்னம் 11.18 AM முதல் 01.18 PM வரை
கன்னி லக்னம் 01.19 PM முதல் 03.19 PM வரை
துலாம் லக்னம் 03.20 PM முதல் 05.24 PM வரை
விருச்சிக லக்னம் 05.25 PM முதல் 07.36 PM வரை
தனுசு லக்னம் 07.37 PM முதல் 09.43 PM வரை
மகர லக்னம் 09.44 PM முதல் 11.37 PM வரை
கும்ப லக்னம் 11.38 PM முதல் 01.20 AM வரை
மீன லக்னம் 01.21 AM முதல் 03.01 AM வரை
பண்டிகை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
ராமரை வழிபட தொழில் விருத்தி உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
கரிநாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
வாகன பழுதுகளை சரிசெய்ய நல்ல நாள்.
ஆலோசனை கூட்டம் அமைக்க உகந்த நாள்.
மருத்துவப் பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
கிழங்கு வகை பயிரிடுவதற்கு சிறந்த நாள்.
இன்றைய ராசி பலன்……
மேஷம்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிந்தனைகளில் புதிய பொலிவுடன் செயல்படுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். அமைதி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.
பரணி : பொலிவு மேம்படும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரிஷபம்
உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு செயல்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : இழுபறிகள் குறையும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்ப்படும்.
மிதுனம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். நிர்வாகத் துறையில் அறிமுகம் ஏற்படும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் சார்ந்த சில அனுபவம் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : அறிமுகம் ஏற்படும்.
புனர்பூசம் : அனுபவம் மேம்படும்.
கடகம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். சுப காரியம் தொடர்பான செயல்களில் அலைச்சல் உண்டாகும். நிர்வாகத் துறைகளில் பொறுமையுடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
சிம்மம்
கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல் அதிகரிக்கும். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
மகம் : மேன்மை உண்டாகும்.
பூரம் : அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.
கன்னி
உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். வீடு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : சிக்கல்கள் குறையும்.
அஸ்தம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
துலாம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய திட்டங்கள் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றிகொள்வீர்கள். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சுவாதி : ஒத்துழைப்பான நாள்.
விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.
விருச்சிகம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல்கள் மறையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். சிக்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசாகம் : அனுபவம் வெளிப்படும்.
அனுஷம் : குழப்பமான நாள்.
கேட்டை : சந்திப்புகள் உண்டாகும்.
தனுசு
பழைய பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பீர்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மூலம் : முடிவு எடுப்பீர்கள்.
பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் : உற்சாகமான நாள்.
மகரம்
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.
கும்பம்
தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் வட்டத்தில் சில புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். எதிலும் தனித்தன்மையோடு செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை ஏற்படுத்தும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
சதயம் : காலதாமதம் ஏற்படும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
மீனம்
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைப்பது நல்லது. முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் மேம்படும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து பழகுவது நல்லது. புகழ் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
பூரட்டாதி : பயணங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : சுதந்திரம் அதிகரிக்கும்.
ரேவதி : தடைகளை அறிவீர்கள்.