தட்டைவடை செய்வது எப்படி வாங்க பார்க்கலாம்?
![தட்டைவடை செய்வது எப்படி வாங்க பார்க்கலாம்?](https://likedtamil.lk/wp-content/uploads/2024/05/FB_IMG_1716441188828-720x560.jpg)
தட்டைவடை செய்வது எப்படி வாங்க பார்க்கலாம்?
தேவையான பொருட்கள்:
½ கிலோ உளுந்து
2 கப் அவிக்காத கோதுமை மா
2 கப் அவித்த கோதுமை மா
6 மே.க வெட்டுத்தூள் (-/+)
4 மே.க மிளகாய்த்தூள் (-/+)
4 மே.க பெருஞ்சீரகம்
வெங்காயம்
கறிவேப்பிலை
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை :
உளுந்தை கழுவி 3 மணித்தியாளங்கள் ஊற வைக்கவும். உளுந்து ஊறியதும், வார விடவும்.
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒருபாத்திரத்தில் உளுந்தைப் போடவும். அதனுடன் அவித்த மற்றும் அவிக்காத கோதுமை மா, பெருஞ்சீரகம், உப்பு, வெட்டுத்தூள், மிளகாய்த்தூள், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, நன்றாக குழைக்கவும். அடுத்ததாக தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து, நன்றாகக் குழைக்கவும். அதன் பின்பு 2 மே.க எண்ணை சேர்த்து குழைக்கவும். குழைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான வெப்பத்தில் சூடேற்றும்.
ஒரு ரின்பால் பேணியின் அடிப்பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பேப்பர் விரிக்கவும். அதன் மேல் வடை மா உருண்டையை வைக்கவும். கையால் வடை மாவை அழுத்தி /தட்டி வட்டமாக்கி (மெல்லியதாக), சூடான எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும். அதே மாதிரி ஒவ்வொரு வடையாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பிரித்தெடுக்கவும்.
பொரித்த வடையை வடியில் போட்டு எண்ணை வார விட்டு எடுக்கவும். இந்த அளவில் செய்ய அண்ணளவாக 135 வடை கிடைக்கும்.
தட்டை வடை தயார்!
குறிப்பு:
உங்களின் சுவைக்கேற்ப மிளகாய்த்தூள், பெருஞ்சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் மாவின் அளவை கூட்டிக் குறைக்கவும்.
2 பிளாஸ்டிக் பேப்பருக்கு நடுவில் வைத்து, உருட்டுக் கட்டையால் உருட்டி, விரும்பிய அளவில் வெட்டியும் எடுக்கலாம் அல்லது சப்பாத்தி மேக்கரின் வைத்து அமத்தியும் செய்யலாம்.
ஒவ்வொரு வடையாக தட்டி எண்ணையில் போட கஸ்டமாக இருந்தால், வடைகளை தட்டி வைத்தும் பொரிக்கலாம்.