திமிங்கிலத்தின் அம்பரை சட்டவிரோதமாக விற்க முயன்றவர் கைது !
திமிங்கிலத்தின் அம்பரை சட்டவிரோதமாக விற்க முயன்றவர் கைது !
திமிங்கில ங்களிலிருந்து பெறப்படும் அரிய வகை அம்பரை சட்டவிரோதமாக விற்க முயன்றவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த அரிய வகை அம்பரை குறித்த இந்நபர், ஒரு பில்லியன் ரூபாவுக்கு விற்க முயன்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதையடுத்து, அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நபரிடமிருந்து ஐந்து கிலோ அம்பரை பொலிஸாரால் கைப்பற்றினர். வலான பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே, இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமிங்கிலங்களிலிருந்து பெறப்படும் அம்பர் கிரிஸ்,பெரும் கிராக்கியாக கருதப்படுகிறது. பலவகை தேவைகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது