தற்காலிக சாரதி உரிமம் பெற்றவர்களுக்கான அறிவித்தல்!

தற்காலிக சாரதி உரிமம் பெற்றவர்களுக்கான அறிவித்தல்!
தற்காலிக சாரதி உரிமம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர சாரதி உரிமம் வழங்கத் தொடங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 03 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் நிறைவடையும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
நாளாந்தம் பத்தாயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாண எழுத்துக்களை அகற்றும் நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்