அரச ஊழியர்களுக்கு அறிவித்தல்!

அரச ஊழியர்களுக்கு அறிவித்தல்!
எதிர்வரும் 11ம் திகதியிலிருந்து 14ம் திகதி வரை அமையப்பெற்றுள்ள நீண்ட விடுமுறையில் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பில் அரச பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட பிரதேச அரச நிர்வாக சேவையிலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் சகல அரச அதிகாரிகள் அரச நிறுவனங்களுடன் இணைந்து கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இதன்போது ஏற்படும் அனர்த்த மற்றும் அவசர தேவைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.