வவுனியா ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கெப் வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.!

வவுனியா ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கெப் வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.!
விபத்தில் படுகாயமடைந்த கெப் வண்டியின் சாரதி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இடத்தில் இதற்கு முன்பும் விபத்துகள் நடந்துள்ளதாகவும், முறையான ரயில்வே கடவை காவலர்கள் இல்லாததால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இன்று காலை அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் இந்த கெப் வண்டி மோதியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.